குறிப்பு:இணயத்தளத்தின் புதிய வசதிகள் - நட்சத்திரம் பொருத்த மற்றும் பல அம்சங்கள் ...
"இந்த சமூகம் வளர கல்வி தான் முக்கியம்"
இச்சங்கத்தின் அங்கமாக விளங்கும் பல்லவன் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளையின் கட்டுப் பாட்டில் பல்லவன் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
வடாற்காடு மாவட்ட வன்னிய குல சத்திரிய சங்கம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு சமுக அமைப்பாகும். இது சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ளது. அரசியலுக்கு அப்பாற்ப்பட்ட இந்த அமைப்பு 1917-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
வடாற்காடு மாவட்ட வன்னிய குல சத்திரிய சங்கத்தின் முக்கிய அங்கமான திருமண தகவல் மையம் நமது உறவினர்களின் பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் திருமணங்கள் சிரமமின்றி எளிதில் முடிய 2002-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த மையம் துவங்க காரணமாக இருந்தவர் பேரா.M.தாமோதரன் என்பது குறிப்பிடத்தக்கது. திங்கட்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை காலை 10.00 முதல் மாலை 5.00 மணிவரை சங்க தலைமையிடத்தில் வரன்கள் பதிவும் கோப்புகள் பார்வையும் நடைபெறுகின்றன. இந்த மையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாகும்.
நாட்டின் முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். தரமான ஆசிரியர்களை உருவாக சங்கம் தீர்மானித்தது, அதன் அடிப்படையில் பல்லவன் கல்வியியல் கல்லூரியானது துவங்கப்பட்டது. இவ்வண்ணம் கல்லூரி துவங்க சிறப்பாக இயங்க பேருதவி புரிந்த பெருமை பேரா.Dr.K.G.தஞ்சி அவர்களை சாரும். உடன் பேரா.M.தாமோதரன் அவர்களும் துணை புரிந்துள்ளார்.
வேலூர் பாரதியார் சாலை எண்.01-ல் அமைந்துள்ள சங்க தலைமை கட்டிடத்தில் 2006-2007 ஆம் கல்வி ஆண்டு முதல் இயங்கி வந்த பல்லவன் கல்வியியல் கல்லூரி, மேல்மொணவூரில் அமைந்துள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. பல்லவன் கல்வியல் கல்லூரி NCTE-ன் அங்கீகாரம் பெற்று இயங்கிவருகிறது.
மேல்மொணவூர்,
அப்துல்லாபுரம் அஞ்சல்,
வேலூர் - 632010
"செய்யும் தொழிலே தெய்வம்” என்பதற்கேற்ப நமது சங்கத்தின் மூலம் ஒரு தொழிற்பயிற்சி நிறுவனம்/பாலிடெக்னிக் தொடங்க வேண்டுமென்று நீண்டநாட்களாகக் கருதப்பட்டு வந்தது.
தொழிற் கல்வியானது சுயமாக ஒரு தொழிலைத் தொடங்குவதற்கும் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் உதவிகரமாக அமைகிறது. "கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” என்கிற சிந்தனையோடு சங்க நிர்வாகம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா சாலையில் பல்லவன் ஐ.டி.ஐ தொடங்க தீர்மானித்தது. பொருளாதாரத்திலும், கல்வியிலும் மிகவும் பின்தங்கிய இப்பகுதியில் உள்ள கிராமங்களை சார்ந்த ஏழை மாணவர்கள் தொழிற்கல்வி கற்று வேலை வாய்ப்பு பெறுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இந்த ஐடிஐ அமைந்துள்ளது.
தாஜ்புரா சாலை,
ஆற்காடு - 632521
பல்லவன் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளையானது. ஆற்காடு அடுத்த தாஜ்புரா சாலையில் உள்ள நமது சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் பல்லவன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியை 2002-ம் ஆண்டு துவக்கியது.
இதற்கு நல்லாசிரியர் திரு. A.L. திருஞானம் அவர்கள் ஊன்று கோலாக விளங்கினார். இப்பள்ளியின் வளர்ச்சிக்கு திரு. ஜெயவேலு, HM (Rtd), திரு. பூங்காவனம் ஆசிரியர் (ஓய்வு), நல்லாசிரியர் திரு. A.L. திருஞானம் ஆகியோர் கொண்ட குழு அரும்பாடுபட்டது. பல்லவன் தொடக்கப்பள்ளியானது மெட்ரிக்குலேஷன் பள்ளியாக செயல்பட 2010-ம் ஆண்டு அரசு அங்கீகாரம் வழங்கியது. தற்பொழுது இப்பள்ளியில் Pre-KG முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ மாணவியர்கள் பயன்று வருகிறர்கள்.
உள்கட்டமைப்பு நிறைந்தப் பள்ளியில் 2016-2017-ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்களுக்கென விளையாட்டுத்திடல் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு யோகா, கராத்தே, கம்ப்யூட்டர் மற்றும் இந்தி அனைத்தும் கற்றுத் தரப்படுகின்றன.
தாஜ்புரா சாலை,
ஆற்காடு - 632521
17/10/1917 - 21/08/1938
21/08/1938 - 08/06/1952
08/06/1952 - 27/03/1954
27/03/1954- 10/05/1955
10/05/1955 - 11/06/1972
12/06/1972 - 12/08/1972
13/08/1972 - 17/06/1978
17/06/1978- 21/10/1980
21/10/1980 - 02/10/1983
03/10/1983 - 23/04/1993
24/06/1993 - 14/06/1997
25/02/2001
14/02/2008 - 22/04/2012
22/04/2012 - 13/04/2013
19/05/2013 - 27/09/2015
27/09/2015 முதல்
எண்.01 பாரதியார் சாலை, வேலூர்- 632001.